Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  08-04-2021
Share:

By Village Missionary Movement

Thursday, 08-Apr-2021

இன்றைய தியானம்(Tamil)  08-04-2021

உன்னைக் காத்துக்கொள் 

“...நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.” – உபாகமம் 4:10

பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதன் குரங்கிலிருந்துதான் உருவானான் என்று சொல்லி தன் கருத்துக்களால் புகழ் பெற்றவர் சார்லஸ் டார்வின். அவர் தனது மரணப்படுக்கையில் இருக்கும்போது அருகிலுள்ள சபையில் இருந்து மக்கள் பாடுகிற பாடல்களைக் கேட்கும்படியாக அறையின் ஜன்னலை திறக்க சொன்னாராம். அவரின் அருகில் உள்ளவர்கள் அவரை நோக்கி, “டார்வின் அவர்களே, அப்படியானால் பரிணாமத்தைக் குறித்த உங்கள் நம்பிக்கையும் கொள்கைகளும் என்னவாயிற்று?” என்று கேட்டனர். அதற்கு டார்வின் “அது எனது வாலிப வயதின் கற்பனைக் கதை” என்று பதில் அளித்தாராம். தன் 22வது வயதில் இறையியல் படிப்பை முடித்த டார்வின் தேவனை பற்றி சரியாக அறிந்து கொள்ளாமல், திருச்சபையில் சேரவும் விரும்பாமல் மனிதனின் படைப்பைக் குறித்து தவறான கருத்தை உலகிற்கு எடுத்துவைத்தார். டார்வினின் பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொண்ட உலகம் அவரின் இறுதி வாக்குமூலத்தை மறைத்துவிட்டது. 

உலக ஞானமும், விஞ்ஞானமும் பெருகிவிட்ட இக்காலத்தில், தேவனைவிட்டு வழிவிலகச் செய்கிற சூழ்நிலைகள் உலகத்தில் அநேகம் காணப்பட்டாலும், கர்த்தரையும் அவரின் இரட்சிப்பையும் மறவாமல் அவர் மேலுள்ள விசுவாசத்தை விட்டுவிடாமலும் சந்தேகிக்காமலும் இருக்கும் ஸ்திர தன்மை நம் இளம் தலைமுறையினருக்கு வேண்டும். அதற்கு தேவனது வல்லமையையும் வழிநடத்துதலையும் நமக்கு பின்வரும் சந்ததிக்கும் மறைக்காமல் விவரிக்க வேண்டும். யூதர்கள் தேவனைக் குறித்து சிறுவயதிலிருந்தே தங்கள் பிள்ளைகளுக்கு போதிக்கக் கட்டளை பெற்றிருந்தனர். மோசே தன் தாயிடம் வளர்ந்த போதே தேவனைக் குறித்து அறிந்துகொண்டார். அதுதான் பின் நாட்களில் அவருக்காக வைராக்கியமாக நிற்கச் செய்தது. பவுல் தீமோத்தேயுவைக் குறித்து சொல்லும் போது உன் தாய்க்கும், பாட்டிக்கும் இருக்கிறதான கர்த்தரைக்குறித்த விசுவாசம் உனக்குள்ளும் இருக்கிறது என்றார். காரணம் என்ன? அவரின் பாட்டியும் தாயும் அவருக்கு சிறுவயதிலிருந்தே கர்த்தரைக் குறித்து சரியாக போதித்தார்கள். 

நாம் எப்படி இருக்கிறோம்? நம் பிள்ளைகளின் காரியத்தில் படிப்புக்கும், உலக ஞானத்துக்கும், திறமைக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை காட்டிலும் தேவனுக்கு முதலிடம் கொடுக்க கற்றுக்கொடுக்கிறோமா? தேவனைக் குறித்த சரியான அறிவு நம்மிடம் காணப்படுகிறதா? நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருந்தால் மாத்திரமே நம் சந்ததியை உலக மாயைக்கு சிக்காமலும், வழிவிலகாமலும் காத்து தேவனிடம் நடத்த முடியும். நாம்தான் நம் பின் சந்ததிக்கு உத்தரவாதிகள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
-    Mrs. வசந்தி ராஜமோகன் 

ஜெபக்குறிப்பு:
முகாமில் பங்குபெறும் ஒவ்வொரு ஊழியர்களையும் கடைசி கால எழுப்புதலுக்கான அப்போஸ்தலர்களாக தேவன் உருவாக்க ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet güncel holiganbet giriş holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking casibom giriş perabet padişahbet padişahbet giriş holiganbet matbet perabet perabet giriş instagram ban service pashagaming pashagaming giris gorabet gorabet giris grandpashabet çarkbet çarkbet giriş deneme bonusu casibom giriş casibom vaycasino vaycasino giriş casibom meritking casibom casibom giriş meritking meritking giriş holiganbet jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet grandpashabet grandpashabet grandpashabet