Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.03.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 17-Mar-2024

இன்றைய தியானம்(Tamil) 17.03.2024 (Kids Special)

 

NEW LIFE   

 

"…ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்;…" - 2 கொரிந்தியர் 5:17

 

Hello குட்டீஸ், புது pen, புது dress , புது things ன்னா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் இல்லையா? புதுசு கிடைத்ததும் பழையதையெல்லாம் Reject பண்ணிடுவோம் அப்படித்தானே! இயேசப்பா நம்ம வாழ்க்கையில் வந்துவிட்டால் பழையவைகளெல்லாம் மாறி புதிய வாழ்க்கை வாழ உதவி செய்வாங்க குட்டீஸ். அதைப் பற்றி ஒரு story கேட்போமா?

 

பாம் . . . பாம் என்று Bus சத்தம், Jet வேகத்தில் பறக்கும் பைக் சத்தம், கிளிங் கிளிங் என்ற சைக்கிள் சத்தம் இதற்கு நடுவில் வேகமாக நடந்து கொண்டிருந்தாங்க வனிதா Aunty . . வீட்டு வேலைக்கு தினமும் லேட்டாத்தான் போவாங்க. அங்கேயும் போய் வேலையை சரியா செய்ய மாட்டாங்க. பாத்திரம் கழுவினால் கூட சுத்தமாக கழுவுவது கிடையாது. அது மட்டுமா வீட்டை பெருக்கி சுத்தம் பண்ணும் போது கட்டிலுக்கு அடியில் சோபாவுக்கடியில் கூட்டுவதே இல்லை. எஜமானியம்மா நினைத்தாங்க . . . இந்த வேலைக்காரியை நிறுத்திவிட்டு, வேறு யாரையாவது வேலைக்கு சேர்த்துக் கொள்வோம் என்று . . . ஆனாலும் கொஞ்ச நாள் பொறுமையாகவே இருந்தாங்க.

 

வனிதா Aunty மகள் ஷீலா, தன் அம்மாவிடம், "அம்மா எனக்கு Sunday class சொல்லி கொடுக்கிற அக்கா நம்ம பக்கத்து வீட்டில் Prayer நடத்துறாங்க வாங்கம்மா" என்று அழைத்துச் சென்றாள். அங்கே இயேசுகிறிஸ்துவின் அன்பையும், நம் பாவத்திற்காய் சிலுவையில் மரித்த செய்தியையும் கேட்ட போது அவர்கள் உள்ளத்தில் ஆண்டவர் பேசினார். இயேசப்பாவுக்கு இடம் கொடுத்த வனிதா Aunty வாழ்க்கையில் பெரிய மாற்றம் உண்டானது. யாரும் பார்க்கவில்லையென்றாலும் வீட்டை சுத்தமாக பெருக்க ஆரம்பித்தார்கள். பாத்திரத்தையும் சுத்தமாக கழுவினார்கள். பொய்யான காரணங்களைச் சொல்லி அடிக்கடி Leave போடாமல் சரியான நேரத்திற்கு வந்து வேலையை நேர்த்தியாக செய்து முடித்தார்கள். சில நாட்களாய் இந்த புதிய மாற்றத்தை பார்த்த எஜமானியம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம் . . . எப்படி திடீர்னு இவ்ளோ பெரிய மாற்றம் என்று கேட்டாங்க. . . இயேசப்பாவை என் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டதால் வந்த மாற்றம் தான் இந்த புதிய வாழ்க்கை என்பதை சொன்னதும் அவர்களுக்கும் மகிழ்ச்சி. ஷீலாவின் படிப்பிற்கான செலவை அவர்களே பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். நம்பிக்கைக்குரிய உதவியாளரா மாறிட்டாங்க.

 

என்ன குட்டீஸ் கதை எப்படி இருந்தது. உங்களுக்கும் New life வாழ ஆசையா? Jesus - ஐ உங்க உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள். அற்புதமான மாற்றம் உங்கள் வாழ்வில் உண்டாவது நிச்சயம் குட்டீஸ். check பண்ணி பார்க்கலாமா? Ok bye . .

- Sis. தெபொராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking perabet casibom holiganbet galabet casibom padişahbet padişahbet giriş grandpashabet jojobet cashwin grandpashabet radissonbet palacebet amgbahis cratosroyalbet grandpashabet betpuan betsalvador matbet meritking perabet perabet giriş instagram ban service betsilin betsilin giris pashagaming pashagaming giris gorabet gorabet giris kralbet holiganbet