Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09.04.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 09-Apr-2024

இன்றைய தியானம்(Tamil) 09.04.2024

 

கிறிஸ்துவுடனே கூட நாம்

 

"கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்;…" - கலாத்தியர் 2:20

 

ஒரு மனிதர் அநேக இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல் பணமோ வசதியோ இல்லாமல், வறுமையினால் ஒரு நாள் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார். கடலின் ஓரமாய் அவர் நடந்து சென்ற போது அவருடைய காலில் ஒரு பாட்டில் இடறியது. அதை அவர் பார்த்த போது அதற்குள் ஒரு கடிதம் மடித்து வைக்கப்பட்டிருந்தது. "இந்த பாட்டிலை கிடைக்க பெறும் அதிர்ஷ்டசாலிக்கும், என் வக்கீலுக்கும் என் முழு எஸ்டேட்டையும் எழுதி வைக்கிறேன். இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவும்" என்று எழுதப்பட்டிருந்தது. அதை அப்படி எழுதி அனுப்பியவர் டெய்ஸி சிங்கர் அலெக்ஸாண்டர் என்னும் சிங்கர் தையல் மிஷன் உரிமையாளர்களில் ஒருவர். அவர் 12 வருடங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள தேம்ஸ் ஆற்றில் ஒரு பாட்டிலில் இவ்வாறு எழுதி போட்டிருந்தார். அது பன்னிரெண்டு வருடங்கள் கழித்து ஜேக் உர்ம் என்னும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தவரின் கைகளில் கிடைத்தது. அது அவரை ஒரே நாளில் மிகவும் பெரிய பணக்காரராக மாற்றியது. எத்தனை ஆச்சரியம் பாருங்கள்.

 

அப்.பவுல் கலாத்தியருக்கு எழுதின நிரூபத்தில் இப்படியாக வாசிக்கிறோம், "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்," (கலாத்தியர் 2:20) என்று. அதே கலாத்தியர் நிரூபத்தில் வேறொரு வசனமும் "கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்."(கலாத்தியர் 5:24) இன்னும் புரியும்படியாக சொல்வோம் என்றால் கிறிஸ்துவை உடையவர்கள் தங்களுடைய ஆசைக்கு என்று எதையும் வைக்காமல் சிலுவையில் தொங்கிய இயேசுவுக்காக விட்டுவிடுவார்கள் என்று.

 

இதை வாசிக்கும் அன்புக்குரியவர்களே, டெய்சி சிங்கர் தன் ஐஸ்வரியத்தை தன் உயிலை ஒரு பாட்டிலில் போட்டு வைத்தார். ஏனெனில் அவரால் தான் செல்லும் இடத்திற்கு எந்த ஐஸ்வரியத்தையும் கொண்டு போக முடியாது. அதே போல ஜேக் உர்ம் -கும் எடுத்துக் கொண்டு போக முடியாது. இந்த உலக ஐஸ்வரியம் இந்த உலகத்தோடு முடிந்து விடுகிறது. எத்தனை பெரிய ஐஸ்வரியவானாயிருந்தாலும் ஒன்றையும் தான் மரிக்கும் போது தனக்காக எடுத்துச் செல்ல முடியாது. கிறிஸ்துவுடனே கூட இருந்து அவருக்காக எதை செய்தோமோ அதுவே நம்முடன் என்றும் நிலைத்திருக்கும். ஆகவே நம்முடைய விருப்பங்களை கிறிஸ்துவுக்காக விட்டுக் கொடுத்து செயல்படுவோம்.

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

நமது ஆமென் வில்லேஜ் டிவி சேட்டிலைட் சேனலாக மாற்றப்பட எடுக்கும் முயற்சிகளில் தேவன் இடைபட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet giriş holiganbet holiganbet güncel holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş