Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03.05.2024
Share:

By Village Missionary Movement

Friday, 03-May-2024

இன்றைய தியானம்(Tamil) 03.05.2024

 

வயது ஒரு பொருட்டல்ல

 

"…சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்" - நீதிமொழிகள் 10:4

 

மாணவர்களை உற்சாகப்படுத்தும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பேச்சாளர் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு மாதம் முழுவதும் அநேக பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு உற்சாக வார்த்தைகளைப் பேசும்படி அழைக்கப்பட்டிருந்தார். அந்நாட்கள் முழுவதும் அநேக இடங்களை சுற்றிப் பார்த்து மகிழலாம் என்று நினைத்திருந்தார். அவருக்கு உதவி செய்யும்படி வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபரைப் பார்த்ததும் பெருத்த ஏமாற்றம். ஏனென்றால் அது 82 வயது பாட்டி அவரது பெயர் மெர்லின். இவர் எப்படி எனக்கு உதவி செய்யப் போகிறார் என்று சோர்வோடு கிளம்பியவருக்கு ஆச்சரியம்! மெர்லினின் சுறுசுறுப்பான ஓட்டம் போன்ற நடையையும், வாகனத்தை மிக கவனமாக அதே நேரத்தில் தேவையான வேகத்தில் சிறப்பாக ஓட்டியது மிகவும் உற்சாகத்தைத் தந்தது. நாட்கள் கடந்தன. சில நேரங்களில் பேச்சாளர் தாமதம் பண்ணினாலும் வழிகாட்டியான மெர்லின் பாட்டி சுறுசுறுப்புடன் அநேக இடங்களுக்கு அழைத்துச் சென்றார். மாலை நேரங்களில் ஒரு சிறுவர் விடுதிக்கு கணக்கு எழுதுவதில் உதவி செய்வதாகவும், அதுபோல ஒரு முதியோர் இல்லத்திற்கு ரொட்டி தயார் செய்து கொடுப்பதாகவும் கூறினார். ஒரு முறை தாவரவியல் பூங்காவில் ஒரு சில தாவரங்களின் விபரத்தைக் கேட்ட போது மெர்லினுக்கு சொல்லத் தெரியவில்லை. ஒரு மாதம் முடிந்து பேச்சாளர் இந்தியா திரும்பும் போது மெர்லின் உங்களுடைய அடுத்த வேலை என்ன என்ற கேள்விக்கு தாவரவியல் குறித்த மாலை நேரப் படிப்பு படிக்க இணைந்துள்ளேன். நீங்கள் சில தாவரங்களைக் குறித்து கேட்ட போது எனக்கு சொல்லத் தெரியவில்லை தெரிந்து கொள்ளப் படிக்கப் போகிறேன் என்ற மெர்லின் பாட்டியைப் பார்த்து மறக்கமுடியாத ஒரு நபரைச் சந்தித்த மகிழ்ச்சியோடு இந்தியா வந்து சேர்ந்தார்.

 

இது ஒரு சவாலான காரியமாக நமக்கு இருக்கின்றது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாருங்கள் என்றால் ஆடி அசைந்து தவழ்ந்து கொண்டு நடக்கிற இக்கால வாலிபர்களுக்கு மெர்லின் பாட்டி மிகச் சவாலான நபரே! வேதத்திலும் காலேப் தனது எண்பத்தைந்து வயதில் மலைநாட்டைத் தாரும் என்று கேட்டு பெற்றுக் கொண்டதைப் பார்க்கிறோம்.

 

அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் உடலை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள், பழக்கப்படுத்துகிறீர்கள்? நமது சரீரம் தேவன் தங்கும் ஆலயம் இதை சுறுசுறுப்புடன், கவனமாய் வைத்துப் பயன்படுத்துவது முக்கியம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். தேவன் உங்கள் மூலம் மகிமைப்படுவாராக, தேவராஜ்ஜியத்திற்கு பிரயோஜனமாக தேவன் நம்மைப் பயன்படுத்துவாராக. ஆமென்.

- L. அழகர்சாமி

 

ஜெபக்குறிப்பு: 

ஊழியங்கள் செய்வதற்கு நம்மோடு கூட தன்னார்வ ஊழியர்கள் அநேகர் இணைந்து செயல்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet holiganbet grandpashabet grandpashabet