Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07.05.2024
Share:

By Village Missionary Movement

Tuesday, 07-May-2024

இன்றைய தியானம்(Tamil) 07.05.2024

 

நற்கிரியைகளை செய்வோம்

 

"சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்" - ரோமர் 2:7

 

மெலித்தா தீவிலே பவுல் அப்போஸ்தலரை விரியன் பாம்பு கவ்விக் கொண்டது. அந்தத்தீவு மக்கள் பவுலை கொலை பாதகன் என்று நினைத்தார்கள். பவுல் சாவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். பவுலுக்காக ஒருவரும் கவலைப்படவில்லை. அவரை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் பவுல், தீவுக்கு முதலாளியாகிய புபிலியுவின் தகப்பன் ஜுரத்தினால் இரத்தபேதியினாலும் படுக்கையில் கிடந்த அவருக்காக ஜெபித்து குணப்படுத்தினார். மற்ற வியாதியஸ்தர்களையும் குணப்படுத்தினார். இந்த பவுலின் உதவிக்காக அந்தத் தீவார் தேவையான அனைத்தையும் கொடுத்து மரியாதையுடன் கப்பலில் அனுப்பி வைத்தனர்.

 

இப்படிப்பட்ட நற்செயலை நாமும் செய்யும்போது ஆத்துமாக்களும் இரட்சிக்கப்பட்டு நமக்கு நல்ல உறவுகளாய், நண்பர்களாய் அவர்கள் மாறுவார்கள். இங்கிலாந்து யுத்த வெற்றி பிரதம மந்திரி (War Victory prime minister) என அழைக்கப்பட்ட வின்ஸ்டன் சர்ச்சில் சிறுவனாக இருக்கும் போது, ஒரு சதுப்பு நிலத்தில் மாட்டிக் கொண்டார். அவர் என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டார். அருகிலிருந்த விவசாயி ஒருவர் ஓடிச்சென்று காப்பாற்றினார். இதற்காக வின்ஸ்டன் சர்ச்சிலின் தந்தை பிரபு ரண்டோல்ப் சர்ச்சில், தன் மகன் படிக்கும் மிகப்பெரிய பள்ளியில் விவசாயி மகனும் படிக்க உதவினார். பின்பு பிரபு ரண்டோல்ப் சர்ச்சில் விவசாயி மகனை மேல்படிப்பிற்காக லண்டனில் புகழ் பெற்ற புனித மேரி மருத்துவக் கல்லூரியில் படிக்க வைத்தார். அவர் தான் உலகப்புகழ் பெற்ற "பென்சிலின்" மருந்தைக் கண்டு பிடித்த அலெக்ஸாண்டர் பிளேமிங் ஆகும். வின்ஸ்டன் சர்ச்சில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது "பென்சிலின்" மூலம் வின்ஸ்டன் சர்ச்சில் உயிரை அலெக்ஸாண்டர் பிளேமிங் காப்பாற்றினார்.

 

விவசாயி பிளேமிங் மற்றும் தன் தகப்பனாரின் நற்செயல்களால் வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டு முறை காப்பாற்றப்பட்டு இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்று "யுத்த வெற்றி பிரதம மந்திரி" (War Victory prime minister) என பெயர் பெற்றார். இங்கிலாந்து நாடே காப்பாற்றப்பட, ஒரு விவசாயியின் நற்செயலும், நற்செயலுக்கு நன்றி கடன் செய்தவரின் செயலும் இருந்தது.

 

கிறிஸ்தவர்களாகிய நாமும் நற்கிரியைகளை சோர்ந்து போகாமல் செய்து கொண்டேயிருப்போம். இன்று கைம்மாறு கருதாமல் நாம் செய்யும் ஆன்மீக பணிக்கும், உலகப் பிரகாரமான நன்மைகளுக்கும் கர்த்தர் இம்மையிலும் மறுமையிலும் நமக்கு பலன் அளிப்பது அதிக நிச்சயமல்லவா!

- Mrs. பாத்திமா செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:

ஜூன் மாதத்தில் நம்முடைய மிஷனெரி பிள்ளைகளுடைய கல்வி தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet tambet grandpashabet betgit radissonbet