By Village Missionary Movement
Friday, 31-May-2024இன்றைய தியானம்(Tamil) 31.05.2024
எதிர்பாலரோடு கவனமாயிரு
"மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைக் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்" - 1 கொரிந்தியர் 15:33
பண்டிதர் பில்லிகிரஹாம், அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தனிமையில் பேசக்கூடாது என்று ஒரு சட்டம் போட்டிருந்தார். காரணம் அநேகர் இந்த விஷயத்தில் தவறி விடக்கூடும் என்பதற்காகவே. எனவே இதை முக்கியமாக கடைபிடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு போதித்தார். ஒரு நாள் பில்லிகிரஹாமிற்கு எலிசபெத் மகாராணியிடம் இருந்து நேரிடையாக போன் அழைப்பு வந்தது. அதில் உங்களைப் பார்த்து உங்களிடம் தனிமையில் சிலமணி நேரம் பேச வேண்டும் என்று சொன்னார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அந்த மகாராணியைப் பார்க்க பேச பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருவரை மகாராணி பார்க்க வேண்டுமென்றால் பல தகுதிகள் காணப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட பெண்ணிடம் இருந்தே அழைப்பு வருகிறது. பில்லிகிரஹாம் என்ன சொல்லப் போகிறார் என்று அநேகர் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ ஒரே வார்த்தையில் "No" சொல்லி விட்டார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் ஏன் அவர் "NO" சொன்னார் என்று பல கேள்வி கேட்கலாம். அவரிடம் பரிசுத்தம் மற்றும் சுயகட்டுப்பாடு இல்லையா என்றும் கேட்கலாம். அவரோ எடுத்த தீர்மானத்தில் உறுதியாயிருந்தார். காரணம் எங்கே, எப்போது யார் யாரிடம் விழுந்து போவார்கள் என்பது தெரியாது. ஊழியத்தை விட ஊழியக்காரர் முக்கியம் என்பதை மறந்து போகக் கூடாது. வேதபுத்தகத்தைப் பார்க்கும் போது பெலத்தில் சிறந்த சிம்சோன், ஆவிக்குரிய வாழ்வில் சிறந்த தாவீது மற்றும் ஞானத்தில் சிறந்த சாலமோன் போன்ற தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரங்கள் கூட இந்த விஷயத்தில் தவறி இருக்கிறார்கள். யாக்கோபின் மகள் தீனாள் கூட ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு பாவத்தினால் தீட்டுப்பட்டாள். பொதுவாக ஆண்களோ பெண்களோ எதிர்பாலரிடம் உள்ள சம்பாஷனை ஞானமாக இருக்க வேண்டும். ஆகாத சம்பாஷணை நல்லொழுக்கத்தைக் கெடுக்கும். சாதாரண பேச்சில் ஆரம்பிப்பது தான் கண்களின் இச்சையாக, மாம்சத்தின் இச்சையாக, பாலியத்தின் இச்சையாக, துர் இச்சையாக மாற வாய்ப்பிருக்கிறது. கவனமாயிருக்க வேண்டியது மிக மிக அவசியம். ஆம், நம் கிறிஸ்தவ வாழ்வில் எந்த களங்கமும் ஏற்பட்டு, கிறிஸ்துவுக்கு அவகீர்த்தி உண்டாக்கி விடாதபடி கவனமாய் வாழ்வோம். கர்த்தருக்கு பயப்படும் பயம், தேவனோடுள்ள உறவு சரியாக இருக்குமென்றால் உலகத்தில் உண்டாகும் இச்சைகளுக்கு தப்பித்துக் கொள்ளலாம்.
- Bro. இசக்கி
ஜெபக்குறிப்பு:
ஒரு மணி நேர மிஷனெரிகள் மற்றும் பகுதிநேர ஊழியர்கள் அநேகரை ஆண்டவர் நம்முடைய பணித்தளங்களில் எழுப்பித்தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864