Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09.06.2024 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 09-Jun-2024

இன்றைய தியானம்(Tamil) 09.06.2024 (Kids Special)

 

Dr. மைக்கன்சி

 

"…சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ" - 1 கொரிந்தியர் 9:16

 

குட்டீஸ்! மிஷனெரிகள் வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்து, அநேக தியாகங்களை பண்ணி நமக்கு சேவை செய்ததால் தான் நாம் ஆண்டவரை அறிந்து கொள்ள முடிந்தது. அது மட்டுமல்ல படிப்பு மற்றும் மருத்துவமும் மிஷனெரிகளால் நமக்கு கிடைத்த பொக்கிஷம். இன்றைக்கும் ஒரு மிஷனெரி என்ன செய்தார்கள் என்பதை கேட்போமா?

 

ஈரோட்டில் இயேசுவின் அன்பை அறிவித்து கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்து வந்தார் மிஷனெரி ப்ராப். இவர் வாழ்ந்தது இருபதாம் நூற்றாண்டு. அந்த நாட்களில் திடீரென்று வியாதியால் பாதிக்கப்பட்டு பலர் இறந்தார்கள். கொரோனா பரவின நாட்களில்... மருந்து இல்லாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் மரித்தார்கள் இல்லையா? அந்த நாட்களில் நமக்கு எவ்வளவு பயமும், வேதனையும் இருந்தது. வீட்டை விட்டு வெளியே போய் விளையாட முடியாம, Schoolக்கு போக முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டோம் தானே! இயேசப்பா அற்புதமா கொரோனாவை Stop பண்ணினாங்க. praise God.

 

 ஆனால் இயேசுவை அறியாத மக்கள் என்ன செய்வாங்க? மலேரியா, காலரா, பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு நிறைய மக்கள் மரித்தார்கள். இதனைக் கண்டு வேதனைப்பட்ட ப்ராப், வேலூரில் பணிபுரிந்து கொண்டிருந்த மைக்கன்சி என்ற அம்மாவை அழைத்தார். ஏன் தெரியுமா? பெண்கள் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளமாட்டாங்க. இதனால் நிறைய பேர் பாதிக்கப்பட்டாங்க. அதனால் பெண் டாக்டரான மைக்கன்சி அழைக்கப்பட்டு இரவு பகல் பாராமல் சேவை செய்தாங்க. தனக்கும் அந்த நோய் வந்திடுமோ என்று பயப்படாமல் மக்களைத் தேடிச் சென்று உதவி செய்தாங்க. இதனால் நிறைய பேர் பயனடைந்தாங்க. இலவசமாய் மருத்துவ சேவை செய்து அயராது உழைத்து, ஈரோடு பகுதியிலேயே 15 ஆண்டுகள் சேவை செய்தார். இவர் தான் இந்த பகுதிக்கு முதல் மிஷனெரி. ப்ராப் மருத்துவமனை உருவாவதற்கு காரணமாகவும் இருந்தார்.   

 

என்ன குட்டி செல்லங்களே! வசதியான வாழ்க்கையை விட்டு, தியாகமாய் சேவை செய்த மைக்கன்சி ப்ராப் இவர்களின் வாழ்வு மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டார்கள் பார்த்தாயா? நீங்களும் Jesus க்கு பயன்பட முடியும். நான் சின்ன பிள்ளை என்னால் என்ன முடியும்னு நினைக்காதே செல்லமே! உன்னால் முடிந்ததை இயேசுவுக்கு கொடு... அருகில் இருப்பவரிடம் அவரை பற்றி சொல்லு. Ok வா.  

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet giriş holiganbet holiganbet güncel holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet casinolevant grandpashabet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş