Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10.06.2024
Share:

By Village Missionary Movement

Monday, 10-Jun-2024

இன்றைய தியானம்(Tamil) 10.06.2024

 

பாரம்

 

"…பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு,…" - எபிரெயர் 12:1

 

ஒரு கிராமத்தில் வயதான பெண் ஒருவர் தலையில் ஒரு புல்கட்டை வைத்துக் கொண்டு நடந்து வந்தார். அப்பொழுது அந்த வழியாக மாட்டுவண்டி ஒன்று வந்தது. உடனே அவர் அதில் ஏறி பயணம் சென்றார். ஆனாலும் அவர் தலையிலுள்ள புல்கட்டை அவர் கீழே வைக்கவில்லை. இதை பார்த்து கொண்டு இருந்த மாட்டுவண்டி ஓட்டுபவர் சிரித்துக் கொண்டே அம்மா புல்கட்டை கீழே வையுங்கள் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. தலையில் இருந்த பாரத்துடனே பயணத்தை தொடர்ந்தார்.

 

குழந்தையில்லாத அன்னாள், சக்களத்தி பெனின்னாளின் வேதனைப்படுத்தும் வார்த்தைகளால் சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பாள். இப்படியே கண்ணீருடனும் பாரத்துடனும் அவளின் நாட்கள் கடந்தன. ஆலயம் செல்லும் வாய்ப்பு கிட்டியது. கர்த்தருடைய சந்நிதியில் இருதயத்தை ஊற்றினாள். பாரத்தை எல்லாம் இறக்கி வைத்தாள். அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. ஆம், அன்னாள் தன்னுடைய பாரத்தை தேவசமூகத்தில் இறக்கி வைத்தாள். தேவனை சார்ந்து பொறுமையோடு காத்திருந்தாள். தேவன் தீர்க்கதரிசி சாமுவேலை பெற்றெடுக்கச் செய்தார். பின்னும் குமாரர், குமாரத்திகளைப் பெற்று தேவனைத் துதித்தாள்.

 

இதை வாசிக்கின்ற நாம் நம்முடைய வாழ்க்கையிலுள்ள பாரங்களை நாமே சுமக்கிறோமா அல்லது ஆண்டவருடைய பாதத்தில் இறக்கி வைக்கின்றோமா? ஆம், சங்கீதம் 55:22ல் "கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒரு போதும் தள்ளாடவொட்டார்" என இந்த வசனம் சொல்கிறது. ஆம், நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற கடன் பிரச்சனை, வியாதிகள், வறுமை இன்னும் சொல்ல முடியாத எத்தனையோ பிரச்சனைகள் இருக்கலாம். ஆனாலும் ஒரு போதும் சோர்ந்து போகாதிருங்கள். உங்களை உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிற ஒருவர் இருக்கிறார். அவர் தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. ஆதலால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள். உங்கள் பாரங்களை அவர்மேல் இறக்கிவைத்து விடுங்கள். அதன் பின் துக்கமுகமாயிருக்க வேண்டாம். அவர் யேகோவாயீரேவாக இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.

- Mrs. நிரோஷா ஆல்வின்

 

ஜெபக்குறிப்பு:

கண்மணியே கேள், யோசுவாவே எழும்பு பத்திரிக்கைகளின் மூலம் அநேக வாலிபர்கள் பயன்பெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet giriş holiganbet holiganbet güncel holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet casinolevant grandpashabet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş