Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.06.2024
Share:

By Village Missionary Movement

Monday, 17-Jun-2024

இன்றைய தியானம்(Tamil) 17.06.2024

 

கூப்பிடுங்கள்

 

"ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்" - சங்கீதம் 50:15

 

எத்தியோப்பியா என்ற தேசத்தில் ஒரு வாலிப்பெண் சில மோசமான கயவர்களிடம் சிக்கிக் கொண்டாள். அந்த மனிதர்கள் அந்த பெண்ணை ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுப்பகுதிக்குள் கடத்திச் சென்று, அவளை சீரழித்து கொலை செய்ய தீர்மானித்தார்கள். அதின்படி அந்தப் பெண்ணை எங்கும் இருள் கவ்வியிருந்த காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்றனர். கயவர்களிடம் சிக்கிக் கொண்ட அவள் கத்தினாள், கூச்சலிட்டாள். ஆனால் காப்பாற்ற ஒருவரும் வரவில்லை. கயவர்கள் ஏளனமாக சிரித்தனர். உன்னைக் காப்பாற்ற இங்கு ஒருவருமில்லை என்று எள்ளி நகையாடினர். தன்னை விடுவிக்க ஒருவருமில்லை என்று சோர்ந்து போன அந்த மகள் தன் கண்களை வானத்திற்கு நேராக ஏறெடுத்து தன் கரங்களை உயர்த்தி, "இயேசப்பா எங்கப்பா இருக்கீங்க? என்னைக் காப்பாற்றுங்க" என்று உரத்த சத்தத்தோடு வேண்டினாள். அவள் கதறுதலை தேவன் கேட்டார். அவர் அந்தக் காட்டிலுள்ள சிங்கங்களுக்கு கட்டளையிட்டார். அந்த பால சிங்கங்கள் பாய்ந்து அந்த பொல்லாத மனிதர்களை கொன்று போட்டது. அந்த பெண்ணையோ அவைகள் ஒன்றும் செய்யவில்லை. என்ன ஆச்சரியமான தேவன் பாருங்கள்.

 

வேதத்திலே தானியேல் கர்த்தரை தேடுவதில் உண்மையாய் இருந்தார். அவரை பகைத்தவர்கள் தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம் பண்ணி விண்ணப்பம் செய்கிறதைக் கண்டார்கள். எந்த மனுஷனும் முப்பது நாள் வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம் பண்ணினால் அவன் சிங்கங்களின் கெபியில் போடப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. சட்டத்திற்கு மேலாக தானியேல் தேவனைத் தேடினதால் சிங்ககெபியில் போடப்பட்டார். ஆனால் தானியேல் தேவனை நோக்கிக் கூப்பிட்டு சிங்கத்தின் பிடியிலிருந்து தப்பினார்.

 

அருமையான தேவ ஜனமே! நம்முடைய தேவன் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் பதில் கொடுக்கிற தேவன். அப்படிப்பட்ட உங்கள் கூப்பிடுதலைக் கவனியாதவர் போல் இருப்பாரோ, நிச்சயம் உதவி செய்வார். உங்கள் ஆபத்துக் காலத்தில் உதவி செய்ய யாருக்கு வேண்டுமானாலும் கட்டளையிடுவார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது நம் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதிலிருந்து நம்மை விடுவிப்பார். உங்கள் ஆபத்துக்காலத்தில் மனிதர்களை நம்புவதைப் பார்க்கிலும் இயேசப்பாவை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் உடனே ஓடிவந்து உங்களை விடுவிப்பார். நீங்கள் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள். ஆமென்!

- Sis. பிரேமலதா

 

ஜெபக்குறிப்பு:

பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் பயன்பெறும் மக்கள் கிறிஸ்துவின் அன்பை அறிய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet giriş holiganbet holiganbet güncel holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet casinolevant grandpashabet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş