Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05.07.2024
Share:

By Village Missionary Movement

Friday, 05-Jul-2024

இன்றைய தியானம்(Tamil) 05.07.2024

 

சாதாரணம், அசாதாரணம்

 

"உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே

ஒரு மதிலைத் தாண்டுவேன்" - சங்கீதம் 18:29

 

இன்று மனிதர்களாலேயே மனிதர்கள் அழிகிறார்கள். காரணம் நான் சாலையில் சரியாகத்தான் செல்கிறேன், மற்றவர்கள் சரியாகச் செல்வதில்லை என்று கூறி, தாறுமாறாக செல்வதாலும், சட்டதிட்டங்களை மதியாததினாலும், விபத்துக்கள் நடைபெறுகிறது. பலவித மோசமான நிகழ்வுகள் ஒரு தனிமனிதனின் தவறினால் நடக்கிறது என்பதை அனுதின செய்திகளில் காண்கிறோம்.

 "

நம்மால் மற்றவர்கள் அழியக்கூடாது, உருவாக வேண்டும்" இந்த உலகத்திலே அநேக சாதனையாளர்கள் உருவாக காரணமாய் இருந்தவர்கள், சாதாரண மனிதர்கள்! ஆனால் "கிறிஸ்தவர்கள்" என்ற ஒரே பெயரை உடையவர்கள். இதற்கு அநேக உதாரணங்கள் உண்டு.  

 

மெழுகுவர்த்தி உற்பத்தி செய்து விற்கும் ஒரு ஏழை கிறிஸ்தவரின் மகன்தான் பெஞ்சமின் பிராங்கிளின். தன் மகனை உலகம் போற்றும் ஒப்பற்ற விஞ்ஞானியாக்கினார். படகு தொழிலாளியின் மகன் தான் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் படிக்கக்கூடிய ஞானம் இல்லாதவர் என்று இவரை முட்டாள் என்று கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களே கூறி கைவிட்டபோதும் அவருடைய தாய் அவரைப் பல அரிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரராக்கினார்.

 

விறகு வெட்டி பிழைக்கும் ஒரு ஏழையின் மகன்தான் ஆபிரகாம்லிங்கன். அவர் அமெரிக்க ஜனாதிபதியானார். புத்தக வியாபாரியின் மகனான சாமுவேல் ஜான்சன், ஆங்கில அகராதியின் ஆசிரியராக டாக்டர் பட்டம் பெற்று, உலகத்தால் இன்றும் போற்றப்படுகிறார். குதிரை பராமரிப்பு ஊழியராக இருந்தவர்தான் ஷேக்ஸ்பியரின் தந்தை. இவரை எழுத்தாளராக உருவாக்க அவருடைய தந்தையாரின் ஊக்கம் இருந்துள்ளது. கண் தெரியாதவர்கள் படிக்கும் எழுத்தை உருவாக்கியது, கண் தெரியாத "லூயிஸ் பிரெய்லி" என்பவர் ஆவார். இவருக்கு 3 வயதில் விபத்தில் ஒரு கண் குருடானது. இவர் 2 கண்ணும் குருடானவர்களுக்கு கண்ணாக விளங்கினார். 

 

நாமும் குறைவுகள் மத்தியிலும் பிறருக்கு ஆசீர்வாதமாய் மாறமுடியும். குடும்ப பின்புலம் இருந்தால்தான் அசாதாரணமான காரியங்களை செய்ய முடியும் என்பதல்ல. ஆண்டவரை விசுவாசித்த சாதாரணமானவர்களைக் கொண்டு அசாதாரணமான காரியங்களை தேவன் செய்திருக்கிறார். இருளின் பாதையில் சென்று நரகத்தில் அழிய இருந்த நாம், இயேசுவாகிய ஒளியின் பாதையில் நடக்க தேவ கிருபை கிடைத்ததே! இப்பாதையில் எல்லாரும் வருவதற்கு உழைப்போம். ஆமென்.  

- D. செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:

ஆகஸ்ட் 15ல் நடைபெறும் வாலிபர்முகாமில் ஒரு லட்சம் வாலிபர்கள் பங்குபெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet matbet giriş holiganbet holiganbet güncel holiganbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom Royalbet Royalbet giriş Royalbet güncel Royalbet meritking meritking giriş perabet perabet giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş galabet casibom casibom giriş grandpashabet grandpashabet holiganbet grandpashabet grandpashabet grandpashabet perabet perabet giriş padişahbet padişahbet giriş grandpashabet grandpashabet grandpashabet casinolevant grandpashabet meritking meritking giriş grandpashabet grandpashabet giriş kalitebet kalitebet giris betsmove betsmove giris gonebet gonebet giris betnano betnano giriş