Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18.07.2024
Share:

By Village Missionary Movement

Thursday, 18-Jul-2024

இன்றைய தியானம்(Tamil) 18.07.2024

 

தேவனுக்கு தேவையான வாலிபர்கள்

 

“…வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள்பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்" - 1 யோவான் 2:14

 

வாலிபர்கள் தேவனுக்குத் தேவை. பிசாசும் வாலிபர்களை தேடி திரிகிறான். வாலிபர்களுக்கு பாவ இன்பத்தைக் கொடுத்து அவர்களிடம் உள்ள பலத்தைத் திருடி, அவர்களை அழித்து விடுகிறான். (வெளி. 12:12, யோவான் 10:10) இன்றும் தேவன் வைத்திருக்கும் நித்திய ஜீவனை பெற, வாலிபர்களை விடாதபடி அவர்களை திசை திருப்பி, இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை அழித்துவிட பிசாசு தீவிரமாக செயல்படுகிறான். வாலிபர்கள் யாரையோ ஹீரோவாக நினைப்பதினால், நீங்கள் ஹீரோ என்றால் அவர்கள் தங்களை "0" (ஜீரோ) என்றே நினைக்கிறார்கள்.  

 

ஒருமுறை பிரதமர் நேரு இங்கிலாந்து சென்றார். அப்பொழுது தத்துவஞானி பெட்ராண்ட் ரூசெல் அவர்களை சந்தித்தார். அப்பொழுது அந்த ஞானி நேருவைப் பார்த்து, "வாருங்கள் "0" நாட்டின் பிரதம மந்திரியே" என அழைத்தார். இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு முன் இந்தியா "0"தான் என நேரு நினைத்தார். தத்துவ ஞானி நேருவின் முகவாடலைப் பார்த்து, "நேரு ஐயாவே, "0" என்கிற கணிதத்தை கண்டுபிடித்து கணிதத்தில் புரட்சி செய்த நாட்டிலிருந்து வருவதையே "0" நாட்டிலிருந்து வந்தவர் என்பதாக குறிப்பிட்டேன்" என்றார்.  

 

இன்றும் வாலிபர்கள் தங்களுக்குத் தேவன் தந்திருக்கும் மேன்மையை உணர விடாமல் பிசாசு ஆதாம் ஏவாளை வஞ்சித்தது போலவே இவர்களையும் வஞ்சித்துக்கொண்டேயிருக்கிறான். பரிசுத்தம் எட்டாகனி, பாவத்திலிருந்து மீள முடியாது என்று எண்ண வைக்கிறான். அநித்தியமான பாவ சந்தோஷத்தை நிரந்தரம் என யோசிக்க வைக்கிறான். வாலிபம் வாழ்வதற்கே! இப்போதே கடவுளை தேட தேவையில்லை. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற சிந்தனையை கொடுக்கிறான்.  

 

வாலிபரே! தந்திரங்கள் நமக்கு தெரியாதவைகளல்லவே. ஆகவே நாம் இருக்கிறபடியே அவரிடத்தில் நம்மை நாம் ஒப்படைப்போமானால், நிச்சயமாக புதிய ஏற்பாட்டிலும், பழைய ஏற்பாட்டிலும் உள்ள பக்தர்களைப் போல் நிச்சயம் நாம் உயர்த்தப்படுவோம். கர்த்தருக்கு வாலிபர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தேவை. தேவன் உங்களை பார்க்கும்விதமாகவே நீங்கள் உங்களைப் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனுக்காய் Heroவாக செயல்படமுடியும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

- S. சாமுவேல் மோரீஸ்

 

ஜெபக்குறிப்பு:

இயேசுவின் சந்ததி நிகழ்ச்சி பார்க்கிற பிள்ளைகள் உண்மையாகவே இயேசுவின் சந்ததியாக மாற்றப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş holiganbet güncel holiganbet giriş holiganbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking casibom giriş perabet padişahbet padişahbet giriş holiganbet cashwin tambet grandpashabet bahiscasino amgbahis betbey amgbahis radissonbet betpuan cashwin matbet perabet perabet giriş instagram ban service pashagaming pashagaming giris gorabet gorabet giris grandpashabet çarkbet çarkbet giriş deneme bonusu casibom giriş casibom vaycasino vaycasino giriş casibom meritking casibom casibom giriş meritking meritking giriş holiganbet